கோவில் கொடை விழா

விளாத்திகுளம் கருமாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

Update: 2023-04-08 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவில் உள்ள கருமாரியம்மன் கோவில் பங்குனி மாத கொடை விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பால் குடங்கள் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தி தேர் இழுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து தேர் வீதி உலா கோவிலில் இருந்து தொடங்கி மதுரை ரோடு, கீழரத வீதி, மார்க்கெட் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்