செங்கோட்டை:
செங்கோட்டை வடக்கு ரதவீதியில் உள்ள அப்பா மாடசாமி கோவில் கொடை விழா கடந்த மாதம் 16-ந் தேதி திருக்கால் நாட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு தினமும் விசேஷ அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
22-ந் தேதி இரவு குடியழைப்பு, குறறாலம் தீர்த்தம் எடுத்து வருதல், விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. கொடை நாளன்று மதியம் உச்சகால பூஜை, சாஸ்தா புறப்பாடு, சிறப்பு பூஜை, நள்ளிரவில் சாமப்படைப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.