ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க வேண்டும்

போச்சம்பள்ளி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்று கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2022-07-04 16:37 GMT

போச்சம்பள்ளி அடுத்த ஒட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாதம்பதி மற்றும் மூக்கம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

போச்சம்பள்ளியை அடுத்த மாதம்பதி, மூக்கம்பட்டி கிராமங்களுக்கு நடுவே அறநிலையத்துறைக்கு சொந்தமான திம்மராய சாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியும், கோவில் நிலங்களில் மண் எடுத்தும் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் நேரடியாக தலையிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்டு டெண்டர் விட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்