கோவில் கும்பாபிஷேகம்

வெம்பக்கோட்டை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-05-01 19:25 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தன. பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேகம் முனீஸ்வரர், ஜடா முனீஸ்வரர், கரு முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து முனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாகமிட்டியினர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்