கீழக்கரை
கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி சித்தி விநாயகர், வாழவந்தாள் அம்பாள் மற்றும் பரிபால தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி அனுஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, வேத பாராயணம் பாடுதல் உள்ளிட்ட முதல்கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. இரவில் இந்தரஸ்தாபனம், அஸ்தபந்தனம் உள்ளிட்டவைகளும் இரண்டாம் கால யாகசாலை பூஜையை முன்னிட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. காலை 9 மணி அளவில் சித்தி விநாயகர், வாழவந்தாள் அம்பாள் உள்ளிட்ட பரிபால தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் திருப்புல்லாணி வெகுமதி அய்யனார் தலைமையிலான வேத விற்பனர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதன்பின் மூலவர் சாமிகளுக்கு பால் பன்னீர், இளநீர், திரவிய பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகமும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.