கோவில் கும்பாபிஷேக விழா
ஆலடிப்பட்டி பாட்டையா சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.;
திருவேங்கடம்:
திருவேங்கடம் வட்டம் ஆலடிப்பட்டி கிராமத்தில் உள்ள பாட்டையா சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம், கோவில் கலசத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.