அத்தனூர் அம்மன் கோவிலில் பாலாலயம்
அத்தனூர் அம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.;
தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் காந்தி நகரில் கிராம தேவதையான ஸ்ரீ அத்தனூர் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிக்கான பாலாலய நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, புண்ணிய யாகம், வாஸ்து பூஜை, கோபுர பாலஸ்தனம் ஹோமங்கள், கோபுர மூலஸ்தான கலாகர்ஷனபூஜை, உள்பட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை காட்டுப்புத்தூர் காந்தி நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் தலை கிராமங்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.