கோவில் கும்பாபிஷேக விழா
பணகுடியில் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பணகுடி:
பணகுடி கோரி காலனி உய்க்காட்டு சுடலை ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் கணபதி ஹோமம், கோ பூஜை பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கும்ப அலங்காரம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலை 2-வது கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், யாக சாலையில் இருந்து புறப்பட்டு உய்க்காட்டு சுடலை மாடசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னா் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.