பேச்சியம்மனுக்கு பெரும்படையல் விழா
மயிலாடுதுறையில் பேச்சியம்மனுக்கு பெரும்படையல் விழா நடந்தது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை தைக்கால் தெரு இலுப்பைத்தோப்பில் பழமை வாய்ந்த சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தொட்டில் கட்டி, பேச்சியம்மனுக்கு படைக்கப்பட்ட உணவை உண்டால் அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி, ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி வாரத்தில் பேச்சியம்மனுக்கு பெரும் படையல் திருவிழா நடத்தப்பட்டு, அதில் படைக்கப்பட்ட உணவை உண்ணுவது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற பெரும்படையல் திருவிழாவில், பேச்சியம்மனுக்கு ஆடு, கோழி, மீன், முட்டை, கருவாடு உள்ளிட்ட அசைவ உணவுகள், இனிப்பு மற்றும் பழவகைகளை வைத்து பெண்கள் படையலிட்டனர். முன்னதாக, பேச்சியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தி, சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு படையலிட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, காத்திருந்து உணவை உண்டு பேச்சியம்மனை தரிசனம் செய்தனர்.