முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு

கூத்தாநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது;

Update: 2022-07-29 19:03 GMT

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் உச்சுவாடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று 2-வது வார ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது. இதில் முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்