விஜயகோதண்டராமர் கோவில் குடமுழுக்கு
பூதலூர் விஜயகோதண்டராமர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி;
பூதலூர் அக்ரஹாரத்தில் உள்ள விஜய கோதண்ட ராமர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இக்கோவிலில் சீதாலட்சுமி அனுமன், விஜய கோதண்டராமர், தனி சன்னதியில் அபய வரத ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் உள்ளனா். குடமுழுக்கையொட்டி கோவில் முழுவதும் புது வர்ணம் பூசப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடம் நாதஸ்வர இசை முழங்க புறப்பட்டு புனித நீர் கோவில் கலசங்களுக்கு ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.