திருப்பத்தூர், சிவகங்கையில் கோவில் திருவிழா: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-09-05 19:19 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

திருப்பத்தூர் அருகே விராமதி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் விராமதி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 55 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தேனி மாவட்டம் கே.கே.பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா வண்டியும், 2-வது பரிசை பாதரக்குடி வளர்மதி வண்டியும், 3-வது பரிசை பரளி திரவியம் வண்டியும், 4-வது பரிசை ஏம்பல் யோகேஸ்வரன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை காரைக்குடி கழனிவாசல் சோலையாண்டவர் வண்டியும், 2-வது மற்றும் 3-வது பரிசை விராமதி சங்கீதாதேவி மற்றும் தையல் நாயகி ஆகியோர் வண்டியும், 4-வது பரிசை உஞ்சனை உமாதேவி ஆகியோர் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 26 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது.

பரிசு தொகை

முதல் பிரிவில் முதல் பரிசை வலையன்வயல் அறிவுத்தேவன் வண்டியும், 2-வது பரிசை அடுகுபட்டி திவேஷ்குமார் வண்டியும், 3-வது பரிசை கே.கே.பட்டி பொன்னையா வண்டியும், 4-வது பரிசை தேவகோட்டை சரவணன் ஆகியோர் வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை விராமதி சுப்பிரமணியன் வண்டியும், 2-வது பரிசை தேனி மாவட்டம் பெருமாள்பட்டி லயாஸ்ரீ வண்டியும், 3-வது பரிசை தேவன்பட்டி சுரேஷ் வண்டியும், 4-வது பரிசை திருமயம் கோட்டை முனீஸ்வரர் ஆகியோர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பரிசுகோப்பை வழங்கப்பட்டது. சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

சிவகங்கை பந்தயம்

இதேபோல் சிவகங்கையில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் 28 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 15 குதிரை வண்டிகள் கலந்துகொண்டது. இதில் முதல் 4 இடங்களை பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்