குறிஞ்சி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம்

குறிஞ்சி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.

Update: 2023-05-30 19:11 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முத்துபிள்ளைமண்டபம் குறிஞ்சி நகர்- நைல் நகர் பகுதியில் குறிஞ்சி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் வருடாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை சம்வச்சரா அபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை 8 மணி அளவில் விநாயகர் பூஜை, புன்னியாவாசம், கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 10 மணிக்கு பூர்ணாஹுதி நடந்தது. வருடாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்