கொடைக்கானல் காளியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

கொடைக்கானல் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-04-18 21:00 GMT

கொடைக்கானல் டோபிகானல் பகுதியில் பிரசித்திபெற்ற பெரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 73-ம் ஆண்டு பங்குனி உற்சவ திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மேலும் நகரின் முக்கிய வீதிகளில் அம்மன் மின் அலங்கார தேர்பவனி நடந்தது. பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்தநிலையில் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தின்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். இந்த ஊர்வலம் டெப்போ காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி ஏரிச்சாலை, 7 ரோடு சந்திப்பு, பஸ் நிலையம், அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி தெருக்கள் வழியாக கோவிலில் முடிவடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்