பெரியாண்டவர் கோவில் திருவிழா
தர்மபுரி அருகே பெரியாண்டவர் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி அருகே கொளகத்தூர் பே.மாரியம்மன் கோவில் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பெரியாண்டவர் கோவில் 117-ம் ஆண்டு திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கங்கணம் கட்டுதலும், கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கன்னியம்மன் பூஜையும், 18-ம் போர் நாடகமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பெரியாண்டவர் பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் 18 கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.