கம்பம் காளியம்மன் கோவில் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

கம்பம் காளியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.;

Update: 2023-04-04 20:45 GMT

கம்பம் வடக்கு பகுதியில் பிரசித்திபெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் திருவிழாவையொட்டி நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டது. கம்பம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்த பக்தர்கள், இறுதியாக கோவிலுக்கு வந்தனர். அப்போது அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

அதன்பிறகு அம்மனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், அரிசி மாவு, பன்னீர். இளநீர், சந்தனம், குங்குமம், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்