வடமதுரையில் காளியம்மன் கோவில் திருவிழா

வடமதுரையில் காளியம்மன் கோவிலில் மகா உற்சவ திருவிழா நடைபெற்றது.;

Update:2023-03-25 02:15 IST

வடமதுரையில் உள்ள காளியம்மன் கோவிலில் மகா உற்சவ திருவிழாவையொட்டி கடந்த 17-ந்தேதி சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று அம்மன் கரகம் பாலித்தலும், தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனைத்தொடர்ந்து இரவு மின் ரதத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் வடமதுரை பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்