பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்

பழனி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2022-09-12 16:17 GMT

பழனி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பிரம்மோற்சவ விழா

பழனி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாத பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் காலை 7 மணிக்கு சப்பரத்தில் சீதேவி-பூதேவியுடன் வரதராஜப்பெருமாள் உலா வரும் நிகழ்ச்சியும், இரவில் அனுமார், பவளக்கால், கருடன், சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. திருவிழாவின் 7-வது நாளான கடந்த 10-ந்தேதி அகோபில வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதையடுத்து காலை 7 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியுடன் தேரோட்டம் தொடங்கியது.

இதில் கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா... என சரண கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர்.

பாலசமுத்திரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. பின்னர் 11 மணிக்கு தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்