சந்தானகோபால கிருஷ்ணன் கோவில் குடமுழுக்கு
சந்தானகோபால கிருஷ்ணன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
பொறையாறு அருகே மாணிக்கபங்கு ஊராட்சி சின்ன ஆணைக்கோவிலில் பிரசித்திப்பெற்ற சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக மூன்று கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பூர்ணாகுதியுடன் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து பின்னர் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சந்தான கோபாலகிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.