திரவுபதி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
திரவுபதி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.
நாகை மாவட்டம் நாகூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. அப்போது பெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் பூக்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.