மீனாட்சி அம்மன் வீதி உலா

மீனாட்சி அம்மன் வீதி உலா நடந்தது.

Update: 2023-03-11 19:15 GMT

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரார் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பூத வாகனம், அன்னப்பச்சி வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் நிகழ்ச்சி, தேரோட்டம், தெப்ப உற்சவம், தியாகராஜர் ருத்திர பாத தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த நிலையில் நேற்று சக்தி திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்