வேளூர் ரெட்டியபட்டி சுவாமிகள் தெப்ப உற்சவம்

வேளூர் ரெட்டியபட்டி சுவாமிகள் தெப்ப உற்சவம் நடந்தது.;

Update: 2023-02-13 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூரில் ரெட்டியபட்டி சுவாமிகளின் தை கடைசி வெள்ளி நூற்றாண்டு விழா 3 நாட்கள் நடந்தது. இதை முன்னிட்டு இசை நிகழ்ச்சிகள், ஸ்ரீஹரி அவதார கணபதிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி மற்றும் வீணை கச்சேரி நடந்தது. முன்னதாக முத்து விமானத்தில் சுவாமிகள் வீதி உலாக்காட்சி நடந்தது. அதேபோல் 108 சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவையொட்டி தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்