உலக நன்மை வேண்டி தீச்சட்டி எடுத்து பிரார்த்தனை

உலக நன்மை வேண்டி தீச்சட்டி எடுத்து பிரார்த்தனை நடந்தது.

Update: 2023-01-28 18:45 GMT

வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு பகுதியில் உள்ள செல்வ நாகமுத்து மாரியம்மன் கோவிலில் தை வெள்ளிக்கிழமையையொட்டி உலக நன்மை வேண்டி அஷ்ட புஜங்க வன பத்ரகாளிக்கு தீச்சட்டி எடுத்து பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் தீச்சட்டி எடுத்தனர். நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்