அகத்திய பெருமானுக்கு பவுர்ணமி யாகம்- திருக்கல்யாண உற்சவம்

அகத்திய பெருமானுக்கு பவுர்ணமி யாகம்- திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Update: 2023-01-07 19:00 GMT

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் பவளக்கொடி அம்மை உடனாகிய ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு உள்ள அகத்தியர் சன்னதியில் பவுர்ணமி சிறப்பு யாகம் மற்றும் அகத்திய பெருமானுக்கும், லோபா முத்ராதேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு ஏராளமான பெண்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து பிரகார உலா நடந்தது. நிகழ்ச்சியில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி, அகத்தியர் பவுர்ணமி வழிபாட்டு குழு தலைவர் அழகு. பன்னீர்செல்வம், செயலாளர் சோமு ஆச்சாரியார் மற்றும் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்