தான்தோன்றீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

51.புதுக்குடி தான்தோன்றீஸவரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-04 19:00 GMT

51.புதுக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தான்தோன்றீஸ்வரர் கோவில்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 51.புதுக்குடி கிராமத்தில் சவுந்தரநாயகி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் அஷ்டபுஜ காலபைரவர் தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று குடமுழுக்கு விழா நடந்தது.

யாசாலை பூஜை

விழாவை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில் கங்கை, யமுனை, காவிரி, கோதாவரி, பிரம்மபுத்திரா போன்ற புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தங்கள் அடங்கிய கடங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

அப்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை கூறி பூஜைகளை செய்தனர்.

குடமுழுக்கு

யாக சாலை பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை 11 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் மகா குடமுழுக்கு நடந்தது. இதில் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.

விழாவில் கோவில் தக்கார் கங்காதரன், ஆய்வாளர் மதன், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுப்பிரமணியன், புதுக்குடி ஊராட்சி தலைவர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை அஷ்டபுஜ கால பைரவர் சேவா டிரஸ்ட் தலைவர் சேங்காலிபுரம் சிவா சிவாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்