வீரனார் கோவிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

வீரனார் கோவிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

Update: 2022-07-05 19:40 GMT

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வீரனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கோவில் வாசலில் பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து சாமிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்