அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

Update: 2022-06-29 16:21 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது. இதில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை தரிசனம் செய்தனர். இதையடுத்து அம்மன் கதை பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்