பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
பாபநாசம்:-
பாபநாசத்தில் பத்திரகாளியம்மன் கோவில் 32-ம்ஆண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 6-ந் தேதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று(7-ந் தேதி) சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் வீதிஉலா காட்சி நடந்தது. நிகழ்ச்சியில் கிராம நாட்டாமைகள், திரளான பக்தர்கள், கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.