சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
பொன்னூர் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
குத்தாலம்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பொன்னூர் கிராமத்தில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 20-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல் மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அலகு காவடி, சக்தி கரகம் எடுத்து ஊர்வலம் வந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.