மகிழவனேஸ்வரர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா
தொக்காலிக்காடு ஊராட்சியில் மகிழவனேஸ்வரர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது
கரம்பயம்;
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொக்காலிக் காடு ஊராட்சியில் 600 ஆண்டுகள் பழமையான மங்களநாயகி மகிழவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து பக்தர்கள் உள்ளே சென்று வழிபட முடியாத நிலையில் சுவாமியை வெளியே வைத்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த கோவில் கட்டுவதற்கும் குடமுழுக்கு நடத்தவும் தமிழக அரசின் அனுமதி தற்போது கிடைத்துள்ளது. இதை முன்னிட்டு தொக்காலிக்காடு ஊராட்சியில் மகிழவனேஸ்வரர் கோவில் புதிதாக கட்ட திருப்பணி தொடங்குவதற்கு அண்ணாதுரை எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். அப்போது கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆறு கரைகாரர்கள் தொக்காலிகாடு ஊராட்சி தலைவர் பாண்டியன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.