மதுக்கூர் அருகே பெரியகோட்டையில் உள்ள வீரனார் (மாவடியான்) கோவில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 27-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கின. யாக சாலை பூஜைகளின் முடிவில் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி எடுத்து கோவில் விமான கலசத்தில் புனிதநீரை ஊற்றினர். இதையடுத்து தீபாராதணை காட்டப்படது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.