அரூர் அருகே நரிப்பள்ளியில் சேலத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அரூர் அருகே நரிப்பள்ளியில் சேலத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-18 17:01 GMT

அரூர்:

அரூர் அருகே உள்ள நரிப்பள்ளியில் சேலத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 15-ந்்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கரிக்கோல் உற்சவம், சக்தி அழைத்தல், தீர்த்தக்குட ஊர்வலம், கணபதி பூஜை, கலச பூஜை, யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கோபுர கலசம் மற்றும் அம்மன், பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்