மேல்சேவூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மேல்சேவூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
செஞ்சி,
செஞ்சியை அடுத்த மேல்ஸ்ரீசேவூர் முத்து மாரியம்மன், செங்கழுநீர் விநாயகர் ஆகிய கோவிலில் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி நடந்து 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, முத்துமாரியம்மன, செங்கழுநீர் விநாயகர் கோவில் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமிதரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா குழுவினர், திருமலை, திருப்பதி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.