கோவில் காளை சாவு
ஜோலார்பேட்டை பகுதியில் கோவில் காளை இறந்தது. இதையடுத்து இறுதி சடங்கு செய்து புதைத்தனர்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியில் சென்றாய சாமி பெருமாள் கோவில் உள்ளது.
ஏலகிரி கிராமம், வக்கணம்பட்டி, புறாகிழவன் வட்டம் மற்றும் புது ஓட்டல் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 15 வருடங்களாக கோவில் காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில்கடந்தசில நாட்களாக கோவிலுக்கு சொந்தமான காளை மாடு உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் இறந்துவிட்டது.
அதைத்தொடர்ந்து ஊர்க் கவுண்டர், தர்மகர்த்தா, நாட்டாண்மை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், மனிதர்களுக்கு செய்வது போல் காளை மாட்டிற்கு இறுதி சடங்குகள் செய்து புதைத்தனர்.