கடத்தூர் அருகே சுங்கரஅள்ளியில்வீரபத்திர சாமி கோவில் திருவிழாதலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2023-05-28 19:00 GMT

மொரப்பூர்:

கடத்தூர் அருகே சுங்கரஅள்ளி கிராமத்தில் குருமன்ஸ் இன மக்களின் குல தெய்வமான வீரபத்திர சாமி கோவில் திருவிழா நடந்தத. கோவில் தர்மகர்த்தா சேகர் தலைமையில் வீரபத்திர சாமியை அலங்கரித்து கொண்டு சில்லார அள்ளிக்கு ஊர்வலமாக சென்றனர். இதில் வீரபத்திரன், தொட்டியம்மன், வீரம்மாள், பாரூரப்பன், பீரியம்மன், சித்தப்பன் ஆகிய சாமிகள் அலங்கரிக்கப்பட்டு, மலைவாழ் மக்களின் கருவிகளான் வாள், அம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சில்லார அள்ளியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

அங்கு சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுங்கர அள்ளி, சில்லார அள்ளி, மோளையானூர், மூக்காரெட்டிபட்டி, மோரூர், ரேகட அள்ளி, கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குருமன்ஸ் இன மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்