கந்திகுப்பம் அருகேசீனிவாச பெருமாள் கோவில் திருவிழா

Update: 2023-05-06 19:00 GMT

பர்கூர்:

கந்திகுப்பம் அருகே வாத்தியார் கொட்டாய் கிராமத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் 47-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு அபிஷேகம், பூஜைகள், நடைபெற்றன. மிட்டப்பள்ளி, வாத்தியார் கொட்டாய், கோனேரி குப்பம் பகுதிகளை சேர்ந்த பெண்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர். இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மொய் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து கருட வாகனத்தில் தேர் ஊர்வலம் மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சீனிவாச பெருமாள் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்