கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளி புஷ்பகிரியில் உள்ள புனித மலர்மலை மாதா ஆலய தேர்த்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் நவநாள் ஜெபம், சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவின் இறுதி நாளில் தேர்பவனி நடந்தது. முன்னதாக ஆலயத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பின்னர் புனித மலர்மலை மாதாவின் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடந்தது. இந்த தேர் பவனியை மறைவட்ட முதன்மை குழு ஜார்ஜ் புனித நீர்தெளித்து தொடங்கி வைத்தார். இதையடுத்து பவனி வந்த தேரின் மீது கிறிஸ்தவர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் கிருஷ்ணகிரி, சுண்டம்பட்டி, எலத்தகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.