சித்ரா பவுர்ணமியையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-05-05 19:00 GMT

தர்மபுரி பகுதியில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்ரா பவுர்ணமி விழா

தர்மபுரி பகுதியில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவனேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பால்குட ஊர்வலம்

தர்மபுரி நெசவாளர் நகர் விநாயகர் மற்றும் வேல்முருகன் கோவில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது பக்தர்கள் அலகுகுத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்ததும் அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

துர்க்கை அம்மன் கோவில்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதேபோல் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள ஸ்ரீ அஷ்ட வராகி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு பழங்கள் மற்றும் நறுமண பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு வெள்ளிகவச அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்