நாமகிரிப்பேட்டை அருகே மாரியம்மன் கோவில் திருவிழா-பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே ஜேடர்பாளையம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை மாத திருவிழா கம்பம் நடுதல் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி, நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பால் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஜேடர்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படது. மேலும் இரவில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சாமி திருவீதி உலா நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாரியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.