திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில்மாசி குண்ட விழாவில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்டம் திருவிழா கடந்த 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. குண்டம் இறங்க ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தினசரி அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
இந்த நிலையில் காப்பு கட்டிய அனைத்து பக்தர்களும் மலையடிகுட்டையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மலையடிக்குட்டையில் இருந்து குடங்களில் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அக்னி கரகம், அலகு குத்துதல் நடந்தது. விழாவில் வருகிற 7-ந் அதிகாலை குண்டம் இறங்குதலும், அன்று இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.