தேய்பிறை பஞ்சமியையொட்டி அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-01-11 18:45 GMT

தர்மபுரி:

காரிமங்கலத்தை அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் நேற்று தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாக சாலையிலிருந்து புனிதநீர் குடங்கள் கொண்டு செல்லப்பட்டு அஷ்ட வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு நறுமண பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.பின்னர் அம்மனுக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்