தர்மபுரி:
காரிமங்கலத்தை அடுத்த கெரகோடஅள்ளியில் அஷ்ட வராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.