மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில்
திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள விநாயகர், மாரியம்மன்மற்றும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து நவகிரக ஹோமம், தன பூஜை, கோ-பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. கணக்கம்பாளையம் மாதேஷ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்னர் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஏந்தி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள கோவில்களில் பூஜை நடைபெற்ற விநாயகர் மாரியம்மன் மற்றும் பாலமுருகன் கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் கேரள செண்டை மேளம் மற்றும் குதிரைகள் நடனமாடியது பக்தர்களை கவர்ந்தது. பின்னர் முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. மேலும் நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
இதை அடுத்து கலசங்கள் வைத்தல், சாமி வைத்தல் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. யாகசாலையிலிருந்து புனித நீர் உத்தம லிங்கேஸ்வர சிவம் சிவாச்சாரியார் குழுவினர் விநாயகர், பாலமுருகன் மற்றும் மாரியம்மன் கோவில் கோபுரகலசங்களுக்கு புனித நீரை ஊற்றினர். கும்பாபிஷேக நிகழ்வில் ஓம் சக்தி பராசக்தி பரவசத்துடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும்பூஜைகள் நடைபெற்றது. இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதமும் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.