சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு பூஜை

Update: 2022-11-11 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் சப்-ஜெயில் சாலையில் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் விநாயக பெருமானுக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, திரவ பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து மாலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்