கனகமுட்லு கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Update: 2022-11-11 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே கனகமுட்லு கிராமத்தில் மகா கணபதி, சன்யாசி மாரியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 9-ந் தேதி மாலை கணபதி பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, கொடி ஏற்றுதல், காப்பு கட்டுதல், தீபாராதனை ஆகியவை நடந்தன.

10-ந் தேதி மாலை யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை நடந்தன. நேற்று காலை 2-ம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாரியம்மன், சன்யாசி மாரியம்மன், மகா கணபதி கோவில் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்