பரமத்தியில் சேத்துக்கால் மாரியம்மன் கோவில் திருவிழா

பரமத்தியில் சேத்துக்கால் மாரியம்மன் கோவில் திருவிழா

Update: 2022-11-02 18:38 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தியில் உள்ள சேத்துக்கால் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 16-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சேத்துக்கால் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. 28-ந் தேதி இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 31-ந் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை பொங்கல், மாவிளக்கு படைத்தல், அன்னதானம் மற்றும் வண்டி வேஷம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை சேத்துக்கால் மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வருதல் மற்றும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி சேத்துக்கால் மாரியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்