கம்பைநல்லூர் பூவாடைக்காரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Update: 2022-10-06 18:45 GMT

மொரப்பூர்:

கம்பைநல்லூரில் இருமத்தூர் சாலையில் உள்ள பூவாடைக்காரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அம்மன் தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்தநிலையில் விழாவையொட்டி நேற்று கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பூவாடைக்காரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் இருந்தவாறு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார சேவையும், பூஜைகளும் செய்யப்பட்டன. இதில் கம்பைநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்