சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி ஆறுபடை முருகன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி ஆறுபடை முருகன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2022-09-30 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கமலநத்தம் ஜி.கே நகரில் உள்ள விநாயகர், ஆறுபடை முருகன், ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களின் திருப்பணிகள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 21-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

பின்னர் பக்தர்களுக்கு கங்கானம் கட்டி, கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கங்கை பூஜை, தீர்த்தக்குடம், முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விநாயகர், ஆறுபடை முருகன், ஆஞ்சநேயர் விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை அர்ச்சகர்கள நடத்தினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை, மகா தீபாராதனை நடந்தது. இதில் சாமிசெட்டிப்பட்டி, கமலநத்தம், ஜி.கே.நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

இந்த கோவில் அமைய காரணமாக இருந்த மறைந்த பூசாரி பச்சியப்பன் என்பவருக்கு கோவிலின் முன் விழாக்குழுவினர் சார்பில் சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்