பண்ணந்தூரில் பிள்ளை முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

பண்ணந்தூரில் பிள்ளை முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

Update: 2022-09-01 17:12 GMT

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் இந்திரா நகரில் உள்ள பிள்ளை முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கங்கனம் கட்டுதல், கங்கை புனித தீர்த்தம் தெளித்தல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம் மற்றும் காசி தீர்த்தம் தெளிக்கப்பட்டு கலசபூஜை, யாகம் வளர்த்தல் போன்றவை செய்யப்பட்டு சாமியை பிரதிஷ்டை செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்