பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையில் உள்ள பழமையான காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மூலவருக்கு பால், திருமஞ்சள், சந்தனம், தேன் மற்றும் பழ வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு பல்வேறு பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு லட்டு மற்றும் சாம்பார் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.